Freelancer / 2021 டிசெம்பர் 18 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 என உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்திருந்த நிலையில், வாக்களிக்கும் உரிமையை 18 வயது நிரம்பியவர்களுக்கு வழங்கும் போது திருமணத்துக்கு மட்டுமே ஏன் தடை விதிக்க வேண்டும் என்று சமாஜ்வாடி எம்.பி. சையது துஃபாலி ஹசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சட்டரீதியான திருமண வயதாக ஆண்களுக்கு 21 வயதும் மற்றும் பெண்களுக்கு 18 வயதும் எனத் தற்போது உள்ளது. இதில் பெண்களின் திருமண வயதையும் ஆண்களைப் போல் 21 வயது என உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் பின்னணியில், ஊட்டச்சத்திலிருந்து பெண்களைக் காக்க அவர்களுக்குச் சரியான வயதில் திருமணம் நடைபெறுவது அவசியம் என்ற கருத்து நிலவி வந்தது. இதற்கான சட்டமூலத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், சமாஜ்வாடி எம்.பி. சையது துஃபாலி ஹசன் வழங்கியுள்ள பேட்டியில்,
"பெண்ணின் கருத்தரிக்கும் வயது 16, 17 வருடங்கள் முதல் 30 வருடங்கள் வரை இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு சராசரியாக 16 வயதில் இருந்து திருமணத்துக்கான வரன் வரத் தொடங்குகிறது. திருமணம் தள்ளிப்போனால் இரண்டு பாதகங்கள் ஏற்படுகிறது. ஒன்று பெண்ணுக்கு மலட்டுத்தன்மை ஏற்படலாம்.
இன்னொன்று பெற்றோருக்கு அதிக வயதானதுபோதும் குழந்தைகள் மாணவர் பருவத்தில் இருக்கும் சூழல் உருவாகிறது. வாழ்க்கையின் கடைசி அத்தியாத்தில் இருக்கும்போது குழந்தைகள் இன்னும் மாணவர்களாக இருப்பது வருந்தத்தக்கது. இயற்கையின் நியதிக்கு எதிராக நாம் செயல்படுகிறோம்.
கருத்தரித்தலுக்கான உடல் ரீதியான அந்தஸ்தைப் பெறும் போது ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும். 16 வயதில் பூப்பெய்தினால் 16 லேயே திருமணம் செய்யலாம். 18 வயதில் ஒரு பெண் வாக்களிக்கலாம் என்றால் 16 வயதில் ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று வினவியுள்ளார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago