2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பெண்களுக்கு குறி!

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 01 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்னோ

 உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்கவுள்ள நிலையில், பெண்களுக்கு பஸ்களில் இலவச பயண சலுகை, இலவச ஸ்மார்ட்போன், ஸ்கூட்டர், 3 காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா வாக்குறுதி அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில்  403 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இங்கு ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ்  கட்சி தீவிரமாக உள்ளது.

இதற்காக கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா  தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மக்களை கவர தேர்தல் வாக்குறுதிகளை, பிரியங்கா தொடர்ந்து அளித்து வருகிறார்.

ஏற்கனவே, விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, 20 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, 10 இலட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சை இலவசம் போன்ற பல வாக்குறுதிகளை அவர் அளித்து உள்ளார்.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் பெண்களுக்காக மேலும் சில வாக்குறுதிகளை பிரியங்கா வெளியிட்டுள்ளார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .