Editorial / 2022 ஜனவரி 20 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், தலையோலப்பரம்பு அருகே உள்ள வெல்லூர், கீழூர் அருகே வசித்து வருபவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரரான மாத்தியூ (54) அவருடைய மனைவி சூசாம்மா (50) இவர்களுடைய மகள் சோனா, அவர் தற்போது திருமணம் ஆகி பெரம்பலூரில் கணவருடன் வசித்துவருகிறார்.
வீட்டில் வயதான தனது தாய் தந்தையர் இருப்பதால் சோனா தனது வீட்டில் ஒரு சுற்று கமெராக்களை வைத்து இடையிடையே வீட்டை தனது மொபைல் போன் மூலம் கண்காணித்து வந்தார்.
அதுபோல், மொபைல் போன் மூலம் நேற்று முன்தினம் (19) கண்காணித்தார். வீட்டின் மாடி பகுதியைப் பார்த்த போது நைட்டி அணிந்த ஆண்ணொருவர் நிற்பது தெரிந்தது. அவர் திருடன் என்று சந்தேகித்து உடனடியாக இவர் தலயோலப்பரம்பு பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அப்பகுதி வெள்ளூர் பொலிஸ் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், அங்கு தகவல் பரிமாறப்பட்டது.
பின்னர் இரு காவல் நிலையங்களிலும் இருந்து பொலிஸார் ஜீப்பில் புறப்பட்டு சோனா வீட்டிற்கு சென்று, வீட்டை சுற்றி வளைத்து மாடியில் பதுங்கியிருந்த திருடனை சுற்றி வளைத்து பிடித்தனர்.
திருடன் கோட்டயம் கீழூர் பகுதியைச் சேர்ந்தவனும் தற்போது வாடகைக்கு ஆலப்புழா மாவட்டம் அரூர் அருகே வசித்து வருவதும் தெரியவந்தது. பெயர் ராபின்சன் (32 வயது ) என்பதும் வெளியானது .
இவன் பிரபல கிரிமினல் என்றும், பகல் நேரங்களில் முதியவர்கள் தனியாக வசிக்கும் வீடுகளை குறிவைத்து இரவு நேரங்களில் இதுபோல வீடுகளின் மாடியில் பதுங்கியிருந்து நள்ளிரவு வீட்டில் இருக்கும் முதியவர்கள் உறங்கும் போது அவர்களை தாக்கி பணம் நகை கொள்ளை அடிப்பது பழக்கம் என்று தெரிகிறது.
21 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
5 hours ago