2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

பெண்ணிடம் ‘லிப்ட்’டில் அத்துமீறல்; டெலிவரி ஊழியர் கைது

Editorial   / 2022 பெப்ரவரி 01 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூளை பகுதியை சேர்ந்த 35 வயது பெண்மணி வீட்டு வேலை பார்த்து வருகிறார்.

இவர் ம் பணி முடிந்து ‘லிப்ட்’ (மின் தூக்கி) மூலம் நேற்று முன்தினகீழே இறங்கி வந்தார்.

அப்போது அவருடன் அதே வளாகத்தில் உள்ள தனியார் டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றும் சூளை குழந்தை தெருவை சேர்ந்த விக்னேஷ் (24) என்பவரும் வந்தார். ‘லிப்ட்’டில் அவர்கள் 2 பேர் மட்டும் இருந்தனர்.

இந்தநிலையில் விக்னேஷ் திடீரென்று அரை நிர்வாணமாகி அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றார். அதிர்ச்சியடைந்த பெண் சத்தம் போட்டார். இதையடுத்து விக்னேசை வளாகத்தில் உள்ளவர்கள் மடக்கி பிடித்தனர்.

 இந்த சம்பவம் குறித்து அந்த பெண்மணி வேலைபார்க்கும் வீட்டின் உரிமையாளர் தவல் தோஷி (33) கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விக்னேசை கைது செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .