2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணின் தலையில் எச்சில் துப்பி சிகை அலங்காரம்

Editorial   / 2022 ஜனவரி 07 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை
 
பிரபல அழகுக்கலை நிபுணரான ஜாவேத் ஹபீப், சமீபத்தில் உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினார். பயிற்சிப்பட்டறையில் பூஜா குப்தா என்கிற ஒரு பெண்ணை மேடைக்கு வரவழைத்து அவரது கூந்தலை சிகை அலங்காரம் செய்து பார்வையாளர்களுக்கு காண்பித்தார் ஜாவேத் ஹபீப். 
அப்போது பூஜா குப்தாவின் தலையில் தனது எச்சிலை துப்பிய அவர், "பார்லரில் தண்ணீர் இல்லையென்றால் உமிழ்நீரை பயன்படுத்துங்கள்" என்று ஜாவேத் ஹபீப் கூறியதும் பார்வையாளர்கள் சிரித்து கைத்தட்டினர். 
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ஜாவேத் ஹபீப்பின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
 
பாதிக்கப்பட்ட பெண் பூஜா குப்தா தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் ஜாவேத் ஹபீப்பின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தார். பயிற்சிப்பட்டறையில் ஆணவத்துடன் நடந்துகொண்ட ஹபீப், தன்னை அவமானப்படுத்தவே மேடைக்கு அழைத்ததாக அவர் கூறினார்.
 
இந்த நிலையில் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஜாவேத் ஹபீப்புக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X