Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 நவம்பர் 14 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை:
மதுரை அண்ணாநகர் செண்பக தோட்டம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடிக்கு பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் பொலிஸார் அவனை தேடி வந்தனர். இதையறிந்த பிரபல ரவுடி, தென்காசி மாவட்டங்களுக்கு சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்தினான். அங்கும் அவன் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தான். இதனால் அவன் மீது அங்குள்ள பொலிஸார் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் பதிவாயின.
இந்த நிலையில் நேற்று இரவு பிரபல ரவுடி மதுரை வந்தான். பின்னர் அவன் தனது நண்பரான வண்டியூரைச் சேர்ந்த பெண்ணுடன் சேர்ந்து செண்பக தோட்டம் பகுதியில் உள்ள ஒரு பூங்கா அருகே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தான்.
அப்போது அண்ணாநகர் காமராஜர் தெருவில், பெண்ணொருவர் தனது மாமாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, பிரபல ரவுடிக் கூட்டத்தினர்,பெண்ணை வழிமறித்தனர். இதனால் பயந்து போன அந்த பெண் தனது மோட்டார சைக்கிளை நிறுத்தினார். பெண்ணை தங்களுடன் வருமாறும், இல்லையென்றால் கத்தியால் குத்திக்கொன்று விடுவதாகவும் மிரட்டினார்கள். பின்னர் இருவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றனர்.
இதனால் பயத்தில் அந்த பெண் சத்தமிட்டு அலறினார். சத்தம் கேட்டு அருகில் வீட்டில் இருந்த மாமா அங்கு ஓடிவந்து காப்பாற்ற முயன்றார். உடனே ரவுடிகள் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் நிலைக்குலைந்த அவர் கீழே விழுந்தார். உடனே இது பற்றி பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் போதையில் இருந்த ரவுடிகள் அந்த பெண்ணை தரதரவென் இழுத்துச் சென்று பூங்கா அருகில் நின்று கொண்டிருந்த வானுக்குள் தள்ளினார்கள். பின்னர் 2 பேரும் மாறி மாறி அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இது பற்றி அறிந்த அண்ணா நகர் பொலிஸார், ரவுடிகளை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் பொலிஸார்கள் மீது கற்களை எடுத்து சரமாரியாக வீசிவிட்டு தப்பி ஓட முயன்றனர். இந்த கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் ஒருவரின் நெஞ்சில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ரவுடியொருவரின் காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அலறி அடித்து ஓடி அவன் கீழே விழுந்தான். உடனே பொலிஸார் அவனை மடக்கிப்பிடித்தனர்.
அவனதுமற்ற ரவுடியும் பொலிஸிலிருந்து தப்பியோட்டம் பிடித்தான். அப்போது அவன் கீழே தவறி விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பொலிஸார் அவனையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
10 minute ago
36 minute ago
39 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
36 minute ago
39 minute ago
49 minute ago