A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரி:
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்தை பேரவையில் சந்தித்து ஜான்குமார் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இராஜினாமா செய்து வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இராஜினாமா செய்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:
புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது.இந்திய அரசியல் சாசன சட்டப்படி புதுச்சேரி அரசு செயல்படும்.
புதுச்சேரி அமைச்சரவை இராஜினாமா செய்யப்படாது. பெரும்பான்மையை நிரூபிப்போம்.இவ்வாறு கூறினார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago