Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 20 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வழக்கொன்றில் ”பெற்றோரைப் பேணாத பிள்ளைக்கு சொத்துரிமை இல்லை ” என்ற தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் பல ஆண்டுகளாக மனச்சோர்வால் கணவன் படுக்கையில் உள்ள நிலையில், தன்னை அவரது சட்டப்படியான காப்பாளராக அறிவிக்கக் கோரி அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும் மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் 2 வீடுகள் சொந்தமாக இருந்தும், தங்கள் மகன் தந்தையைக் கவனிக்கவில்லை என்றும், தானே மருத்துவச் செலவைச் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இவ்வழக்கில் தன்னையும் சேர்த்துக்கொள்ளக் கோரி அவர்களின் மகன் இடையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இவ் வழக்கை விசாரித்த நீதிபதிகள், தந்தையை ஒருமுறையாவது மருத்துவரிடம் அழைத்துச் சென்றீர்களா? அவரது மருத்துவச் செலவை ஏற்றீர்களா? என மகனிடம் வினவினர்.
ஆவணங்களின்படி மருத்துவச் செலவைத் தாயே செய்து வந்ததும், ஒருமுறை கூட மகன் செலவை ஏற்கவில்லை என்பதும் தெரிவதாகக் கூறினர். தந்தையைப் பேணுவதில் அக்கறை இல்லாத மகனுக்கு அவரது வீடுகளில் எந்த உரிமையும் இல்லை எனக் கூறி இடையீட்டு மனுவை நிராகரித்தனர்.
இத் தீர்ப்பிற்கு சமூக வலைத்தளத்தில் மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago