2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா – சீனா முடிவு

Ilango Bharathy   / 2022 மார்ச் 14 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

லடாக்கின் சில பகுதிகளில் இந்தியாவும் சீனாவும் சுமார் 50, 000 க்கும் மேற்பட்ட வீரர்களை ஆயுதங்களுடன் நிறுத்தி வைத்துள்ளதால் அங்கு பதற்ற நிலை நிலவி வருகின்றது.

இந்நிலையில் லடாக்கின் எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் உள்ள இந்திய மற்றும் சீனாவின்  படையினர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை ப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11 ஆம் திகதி இந்தியா- சீனா இராணுவத் தளபதிகள் மட்டத்திலான 15ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏமில்லை என்ற போதும் பேச்சுவார்த்தையைத் தொடர இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இது குறித்த கூட்டறிக்கை ஒன்று நேற்று முன்தினம்(12)  வெளியானது. இதில் இருதரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை எட்டும் வரை பேச்சுவார்த்தை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .