2025 ஜூலை 31, வியாழக்கிழமை

பேயால் ஊரடங்கு; அடுத்தடுத்து ஐவர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 26 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது கிராமத்தைப்  பேய்கள் சூழ்ந்துள்ளதாக நம்பிய பொதுமக்கள் 2 நாட்களாக தமது வீடுகளுக்குள் முடங்கியுள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சருபுஜ்ஜிலி கிராமத்தைச் சேர்ந்த மக்களே இவ்வாறு  தமது வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தில்  அடுத்தடுத்து ஐவர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பேய்களின் நடமாட்டம் காணப்படுவதாக மந்திரவாதி ஒருவர் தெரிவித்ததாகவும், இதனால்   அச்சமடைந்த மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சிறப்புப்  பூஜைகளை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2 நாட்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது

என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையறிந்த பொலிஸார் அக் கிராமத்திற்கு சென்று ”பேய்கள் என்பது உலகத்தில் கிடையாது. இது போன்ற மூட நம்பிக்கைகளை நம்ப வேண்டாம்” என பொதுமக்களுக்கு அறிவுரை கூறியதாகவும், ஆனாலும் கிராம மக்கள் தொடர்ந்து பூஜையைச் செய்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .