2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

பேஸ்புக் பழக்கத்தில் நகை கொள்ளை

Freelancer   / 2022 மார்ச் 02 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. அவரது மனைவி கீதா (24). கீதாவுக்கு பேஸ்புக் மூலம் செல்வம் (23) என்பவர் அறிமுகமானார். இவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். 

அண்மையில் கீதா, மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு நண்பர் செல்வத்தை சந்தித்துள்ளார். செல்வம், கீதாவை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் பேசிக்கொண்டிருந்துள்ளனர். 

அப்போது அங்கு வந்த, மூன்று வாலிபர்கள், இவர்களை மிரட்டி கீதா அணிந்திருந்த எட்டு பவுண் தாலி சங்கிலி, தோடு உட்பட 11 பவுண் நகைகளை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். 
செல்வமும் செய்வது அறியாமல் பயத்தில் உறைந்துள்ளார். ஆனால், கீதா, ​பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரை ஏற்ற பொலிஸார் கீதாவிடமும் செல்வத்திடமும் விசாரணை மேற்கொண்டனர். 

அதில், கீதா நடந்தவற்றை கூறும் போது, ‘செல்வம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, எழுந்து சென்று போனில் பேசிவிட்டு வந்தார். அதன் பிறகே இந்தச் சம்பவம் நடந்தது’ என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பொலிஸார் செல்வத்திடம் விசாரணையை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில், தனது நண்பர்கள் மூலம் கீதாவின் நகைகள் பறிக்கப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார். அதையடுத்து செல்வம் மற்றும் அவரது நண்பர்களைப் பொலிஸார் கைது செய்தனர். பிடிபட்ட அவர்களிடம் இருந்து கீதாவின் நகையும் கைப்பற்றப்பட்டது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .