2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

பொலிஸாரின் நூதன திட்டத்தால் விழிபிதுங்கும் மதுப்பிரியர்கள்

Freelancer   / 2022 மார்ச் 03 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீஹாரில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க, ​பொலிஸார் நூதன நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இங்கு 2016ஆம் ஆண்டு முதல், மது விற்கவும், குடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநிலத்தில் பலரிடம் மது பழக்கம் குறையவில்லை. இங்கு கள்ளச்சாராய விற்பனையும் அதை குடித்து பலர் இறக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், மாநில பொலிஸார் கள்ளசாராயத்தை ஒழிக்க, நூதன நடவடிக்கை மேற்கொண்டனர். குடிபோதையில் வாகனம் ஓட்டி, பொலிஸில் பிடிபடுவோருக்கு அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. தற்போது போதையில் வாகனம் ஓட்டி சிக்கினால், சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க ஒரு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

போதையில் வாகனம் ஓட்டி பொலிஸிடம் சிக்குபவர்கள், தான் குடித்த மது எங்கே வாங்கப்பட்டது; விற்றது யார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். பொலிஸார்,  அவர் கூறிய தகவலை வைத்து விசாரணை மேற்கொள்வர். தகவல் உண்மையாக இருந்தால், அதை கூறுபவருக்கு எந்தத் தண்டனையும் விதிக்கப்படாது. தகவல் பொய்யாக இருந்தால், கூடுதல் தண்டனை விதிக்கப்படவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .