A.K.M. Ramzy / 2020 நவம்பர் 23 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
அனுமதியின்றி பிரசாரம் செய்ததற்காக கைது செய்து விடுதலை செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி,பொலிஸாரை மிரட்டும் வகையில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி 2021 சட்ட சபை தேர்தலுக்கான பிரசாரத்தை இப்போதிருந்தே தொடங்கி விட்டார். நவம்பர் 20 ஆம் திகதி திருக்குவளையில் பிரசாரத்தை தொடங்கிய உதயநிதியை தொடங்கினார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகப் பொலிஸார் கைது செய்தனர். உதயநிதியின் கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. சுமார் 7 மணிநேரத்துக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கைதுக்கு பிறகு அவர் பேசியதாவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியதாவது:
"என்ன அடிப்படையில் என்னைக் கைது செய்கிறீர்கள் என கேட்டேன். இது நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இல்லை. மீனவர்கள் அழைத்ததால் தான் வந்தேன், மைக் பிடித்து பேச கூட இல்லை எனக்கூறினேன். அதற்கு, நீங்கள் எங்கு சென்றாலும் கூட்டம் சேர்கிறது என்பதால் போக முடியாது என்றனர். அப்போது கூட்டத்தினரை சமாதானம் செய்து வன்முறை வேண்டாம் எனக் கருதி கைது செய்யுமாறு கோரினேன்.
தூண்டிவிடுபவர் எடப்பாடி பழனிசாமி தான். ஆனால் அதை செய்பவர் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ். அவரது பெயரை எல்லாம் நாங்கள் (திமுக) ஞாபகம் வைத்திருப்போம். இன்னும் அஞ்சு மாசம் தான் இருக்கு. எங்களுக்கு தெரியாத பொலிஸா, நாங்கள் பார்க்காத காவல்துறையா?.
இவ்வாறு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. காவல்துறை டிஜிபி.,யை மிரட்டும் தோனியில் உதயநிதி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
22 minute ago
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
32 minute ago