2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பொலிஸ் நிலைய தரையில் தூங்கிய முன்னாள் அமைச்சர்

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருநெல்வேலி

 பொலிஸாரால்  கைது செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சி  முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி ஜங்ஷன் பொலிஸ் நிலைய தரையில் படுத்து தூங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் நமிதாவை ஆதரித்து கட்சி நிர்வாகி பாஸ்கர் பிரசாரம் செய்தார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி தி.மு.க., - எம்.பி., ஞானதிரவியம், அவரது மகன்கள்   பாஸ்கரை தாக்கினர்.பாஸ்கர், திருநெல்வேலி அரசாங்க  மருத்துவமனையில் சிகிச்சை  பெற்றார். அவர் புகார் அளித்தும் பொலிஸார்  வழக்கு பதியவில்லை.

 நேற்று முன்தினம் இரவு, பாஸ்கரை சந்தித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடல்நலம் விசாரித்தார். பின்னர், ஞானதிரவியம் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி இரவு 10:00 மணிக்கு, திருநெல்வேலி ஜங்ஷன் பாரதியார் சிலை முன் தரையில் அமர்ந்து போராட்டம் செய்தார்.அவருடன் மாவட்ட தலைவர் மகராஜன் உட்பட 30 பேர் பங்கேற்றனர்.

இதையடுத்து, பணகுடி பொலிஸார்  ஞானதிரவியம், மகன்கள் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆயினும், கொலை முயற்சி 307 பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறி பொன் ராதாகிருஷ்ணன் போராட்டத்தை தொடர்ந்தார்.

இரவு 11:00 மணிக்கு துணை ஆணையாளர் சுரேஷ்குமார் வந்து பேச்சு நடத்தினார். பொன் ராதாகிருஷ்ணன் போராட்டத்தை தொடர்ந்ததால், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்கு வழக்கு பதிவு செய்ததாக கூறி, பொன் ராதாகிருஷ்ணன் உட்பட நான்கு பேரை ஜங்ஷன் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .