2026 மார்ச் 09, திங்கட்கிழமை

பொலிஸ்காரப் பெண்ணுக்கே டிமிக்கி

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 02 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை,

  பெண் பொலிஸ்  ஒருவருக்கு, பேஸ்புக் ஊடாக புதிய நண்பரொருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த நண்பர் தனது பெயர், மிலிந்த் தேஷ்முக் எனவும்,தான்  உதவி பொலிஸ்  இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருவதாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

சில நாட்களின் பின்னர், பெண் பொலிஸின்  பேஸ்புக் குறுந்தகவலில், பொலிஸ் சீருடையில்,மிலிந்த் தேஷ்முக் இருக்கும் புகைப்படத்தை அனுப்பி உள்ளார்.

இதனை நம்பிய பெண்பொலிஸ் அவரிடம் நட்பாகப் பேசி வந்தார். இந்நிலையில் சில நாள்கள் கழித்து, அவர் பெண் பொலிஸைத்  தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, தனது பணப்பை தொலைந்து விட்டதாகவும், தனக்கு அவசரமாக ரூ.10 ஆயிரம் தேவைப்படுவதால், பணம் தந்து உதவும்படியும், சில நாள்களில் பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும் கூறினார். இதனை நம்பி  இறக்கப்பட்ட பெண் பொலிஸ், அவருக்கு ரூ.10 ஆயிரத்தை கொடுத்து உள்ளார்.

இந்தநிலையில் சில நாள்கள் கழித்து பெண் பொலிஸ், மிலிந்த் தேஷ்முக்கிடம் பணத்தை திருப்பி கேட்டபோது அவர் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த பெண் பொலிஸ் இது குறித்து விசாரித்ததில், மிலிந்த் தேஷ்முக் என்பவர்  போலி பொலிஸ் அதிகாரி என்று  தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த பெண் பொலிஸ், மிலிந்த் தேஷ்முக் மீது கலம்பொலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பொலிஸாரின்  யோசனைப்படி பெண் பொலிஸ், சம்பவத்தன்று மிலிந்த் தேஷ்முக்கிடம் தந்திரமான முறையில் தொலைபேசியூடாக உரையாடி,கல்யாண் ரெயில் நிலையத்துக்கு வரவழைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த மிலிந்த் தேஷ்முக்கை அங்கு மறைந்து இருந்த பொலிஸார்  மடக்கி பிடித்து கைது செய்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .