A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 11 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கஞ்சாவுக்காக 'கேட்மைன்' போதை ஊசியை விற்றதாக ஜிப்மர் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கஞ்சா விற்பனையாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டு, அவர்களுடன் ஒருகிலோ கஞ்சா, போதை ஊசி போத்தல்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முதலியார்பேட்டை பொலிஸார் 100 அடி சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் சோதனை நடத்தியபோது பாலியல் தொழிலில் பெண்ணை ஈடுபடுத்தியதாக விடுதி மேலாளர் உட்பட ஐவரை அண்மையில் கைது செய்தனர்.
மேலும் அதே விடுதியில் மற்றொரு அறையில் புதுவையைச் சேர்ந்த இளைஞர் தேவநாதன், பெங்களூரைச் சேர்ந்த பெண் நாத்தலி ஆகியோரை போதை மருந்து உட்கொண்ட, மயக்க நிலையில் பொலிஸார் மீட்டனர். அந்தப் பெண்ணைச் சிகிச்சைக்கு பொலிஸார் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு கஞ்சா, போதை ஊசி ஆகியவை எங்கிருந்து கிடைத்தன என்று விசாரணை யைத் தொடங்கினர்.விசாரணையில் அவர்களுக்குக் கஞ்சா, போதை மருந்தை ஆரோவில்லில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இவான் வழங்கியது தெரியவந்தது.
அதையடுத்து இவானைக் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவருக்கு லாஸ்பேட்டை என்பவர் கஞ்சா மற்றும் போதை மருந்தை வழங்கியது தெரியவந்தது. இவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
45 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
57 minute ago