A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோல்கட்டா :
மேற்கு வங்கத்தில், காரில் போதைப் பொருள் வைத்திருந்த, பாரதிய ஜனதா இளைஞர் அணி பொதுச் செயலர் பமீலா கோஸ்வாமியை, பொலிஸார் கைது செய்துள்ளனர். இதில், பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் சதி செய்திருப்பதாக, பமீலா குற்றஞ்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சோதனைமேற்கு வங்க மாநிலத்தில் தலைநகர் கோல்கட்டாவில், நேற்று மாலை, பா.ஜ., இளைஞர் அணியின் பொதுச் செயலர் பமீலா கோஸ்வாமி, காரில் சென்றார். அவருடன், இளைஞர் அணி உறுப்பினர் பிரபிர் குமார் தே என்பவரும் இருந்தார்.அப்போது, அவரின் காரை மறித்து, பொலிஸார் சோதனை செய்தனர்.
சோதனையில், காரின் இருக்கைக்கு அடியில் இருந்தும், பமீலாவின் பணப் பையில் இருந்தும், 'கோகெய்ன்' என்ற போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டது. 100 கிராம் அளவுக்கு இருந்த, அந்த போதைப் பொருளை, பொலிஸார் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, காரில் இருந்த, பமீலா, பிரமிர் குமார் மற்றும் பமீலாவின் பாதுகாவலரை பொலிஸார் கைது செய்தனர்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026