A.K.M. Ramzy / 2020 நவம்பர் 04 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூரு,
திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு இணை பொலிஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருள்கள் பயன்படுத்தியது மற்றும் அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களை தவிர போதைப்பொருள் விற்பனையாளர்கள் லோயம் பெப்பர் சம்பா, பிரசாந்த் ரங்கா, பிரதிக் ஷெட்டி, நயாஸ், நடிகைகளின் நண்பர்கள் ரவிசங்கர், ராகுல், பெங்களூரு நகை வியாபாரி வைபவ் ஷெட்டி, சீனிவாஸ் சுப்பிரமணியன், பினால்டு உடேன் உள்பட 15இக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சீனப்பா நடிகைகளுக்கு பிணைவழங்க மறுத்து உத்தரவிட்டு இருந்தார்.
அதாவது சிறப்பு நீதிமன்றில் நடிகைகள் 5 முறைக்கு மேல் பிணை கேட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால் அனைத்து தடவையும் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago