2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

போரை நிறுத்துங்கள் புடின்; வைரமுத்து டுவிட்

Ilango Bharathy   / 2022 மார்ச் 10 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் மீது  பல நாடுகள் அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

மேலும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருவதோடு போரை நிறுத்துமாறு வலியுறுத்தியும்  வருகின்றனர். 

இந்நிலையில் ‘போரை நிறுத்துங்கள் புடின்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து டுவிட்டரில்  பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் ” மில்லி மீற்றராய் வளர்ந்த உலகம் மீட்டர் மீட்டராய்ச் சரியும், கரும்புகை வான் விழுங்கும், பகலை இருள் குடிக்கும், கடல்கள் தீப்பிடிக்கும், குண்டு விழாத நாடுகளிலும் ஏழைகளின் மண்பானை உடையும், ஆயுதம் மனிதனின் நாகரிகம், போர் அநாகரிகம்” போரை நிறுத்துங்கள் புடின் ”எனக்  கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .