2025 ஜூலை 16, புதன்கிழமை

“போர் முழுமையாக முடிவடையவில்லை”

Freelancer   / 2023 நவம்பர் 27 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக இந்திய இராணுவத்திற்கும் பயங்கவாதிகளுக்கும் இடையேயான சண்டை நடந்து வருகிறது.

கடந்த வாரம், ரஜோரியில் நடந்த ஒரு நடவடிக்கையில் இரண்டு கேப்டன்கள் உட்பட ஐந்து இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நடவடிக்கையில், ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்ற லஷ்கர்-இ-தொய்பா உயர்மட்ட தளபதி உட்பட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், “ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முழுமையாக முடிவடையவில்லை, பாதுகாப்புப் படையினர் இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம், அதற்காக போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை” என ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆர்.ஆர் ஸ்வைன் தெ​ரிவித்துள்ளார்.

குருபூராப்பை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள சட்டிபட்ஷாய் குருத்வாராவில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“இந்தப் போர் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இந்த போரினால் எந்தப் பலனும் இல்லை என்று எதிர் தரப்பு ஒப்புக்கொண்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும். அதுவரை இழப்புகள் ஏற்படுவது நிதர்சனம். ஆனால் அந்த இழப்புகளைச் சுமந்து கொண்டு நாம் முன்னேற வேண்டும். இந்தப் போரிலிருந்து நாம் பின்வாங்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X