2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

போஸ்டர்களில் வந்த காதலர்கள்

Ilango Bharathy   / 2022 மார்ச் 01 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது காதலிக்கு வேறு ஒருவருடன்  நிச்சயமானதால் ஆத்திரமடைந்த இளைஞரொருவர் தனது காதலியுடன் எடுத்த புகைப்படங்களை போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டிய சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் விஜய்ரூபன்.  இவர் தனது உறவுக்காரப் பெண் ஒருவரை 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.

எனினும் அப்  பெண்ணின் தந்தையிடம்  இது குறித்து தெரிவித்த போது, அவர் இத் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளதாகக்  கூறப்படுகின்றது.

விஜய்ரூபன் அண்மையில்  இடம்பெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த  சில தினங்களுக்கு முன்னர் அப்பெண்ணிற்கும் வேறு நபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஏற்கனவே, தேர்தல் தோல்வியால் வருத்தத்தில் இருந்த விஜய்ரூபனுக்கு காதலியின் நிச்சயதார்த்தம் குறித்த செய்தி தெரிய வரவே ஆத்திரமடைந்த அவர், காதலியுடன் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள்  மற்றும் அவர் கொடுத்த கடிதம் ஆகியவற்றை போஸ்டர் அடித்து, அப்பகுதியில் ஒட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் தந்தை பொலிஸ் நிலையத்தில் விஜய்ரூபன் மீது  புகார் அளித்துள்ளதாகவும், இதனையடுத்து விஜய் ரூபன் தலைமறைவாகியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X