2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மகனை விஷ ஊசி போட்டுக் கொன்ற தந்தை

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேலம்:

புற்றுநோய் பாதித்த சிறுவனை அவனது தந்தையே விஷ ஊசி போட்டு கருணை கொலை செய்து விட்ட  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கொடைக்காரன் வளவு பகுதியை சேர்ந்த லொறி சாரதியே தனது மகனை கொலை செய்துள்ளார்.

சிறுவனுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் சிறுவன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நாளடைவில் அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுவனுக்கு புற்றுநோய் உள்ளதாக கூறியுள்ளார். மருத்துவரின் இந்த வார்த்தை  தகப்பனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ''மகனுக்கு இப்படி ஆகி விட்டதே'' என்று அவர் சோகத்தில் இருந்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மகனை கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஒன்றரை வருடமாக சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

ஆனாலும் மகனின் உடல்நலம் முன்னேற்றம் அடையாமல் தொடர்ந்து மோசமான நிலையில் இருந்து வந்தது. இதனால் அவரை வீட்டுக்கே கொண்டுவந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த பிறகு சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமானது.

அதாவது சிறுவன் எழுந்து நடக்க கூட முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டதாக கூறப்படுகிறது.

மகனின் உடல் முழுவதும் புற்றுநோய் பரவி புண் ஏற்பட்டதாக தெரிகிறது. தனது கண்முன்னே மகன் படும் நரக வேதனையை கண்டு தந்தை  மனம் துடித்துள்ளார்.

இப்படி மகன் கொடூர வேதனையை அனுபவிப்பதை விட அவன் மரணமடைவது மேல் என்று தந்தை முடிவெடுத்துள்ளார்.

இதனால் மகனை கருணை கொலை செய்ய முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .