2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

மகளை கிண்டல் செய்த 69 வயது முதியவரை அடித்துக்கொன்ற தந்தை

Editorial   / 2022 ஜனவரி 05 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை,
 
மராட்டிய மாநிலம் மும்பையில் சப்அர்பன் முல்தண்ட் பகுதியை சேர்ந்தவர் சலீம் ஜாபர் அக்தர் ஆலம் (38). இவருக்கு ஒரு மகள் உள்ளார். சலீமின் வீட்டில் 69 வயதான அப்துல் கலில் ஷேக் என்ற முதியவர் சமையல்காரராக வேலை செய்துவந்தார்.
 
இதற்கிடையில்,  அப்துல் சமையல் வேலை செய்து வரும்போது தனது முதலாளியான சலீமின் மகளை அடிக்கடி கிண்டல் செய்துள்ளார். தனது மகளை சமையல்காரர் அப்துல் அடிக்கடி கிண்டல் அடிப்பது சலீமிற்கு தெரியவந்தது.
 
இந்நிலையில், சமையல் வேலை செய்துகொண்டிருந்தபோது அப்துல் வழக்கம்போல நேற்றும் மீண்டும் அந்த சிறுமியை கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சலீம் சமையல்காரர் அப்துலை பயங்கர ஆயுதங்களை கொண்டு அடித்துள்ளார். இதில், சலீம் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
 
இதையடுத்து, சலீமின் உடலை வீட்டிற்கு அருகே உள்ள ஒரு மின்கம்பம் அருகே தூக்கிவீசியுள்ளார். சாலையோரம் ஒருநபர் ரத்தகாயங்களுடன் கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்தது சலீமின் வீட்டில் சமையல் வேலை செய்யும் அப்துல் என்பது தெரியவந்தது.
 
இதனை தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் தனது மகளை அப்துல் அடிக்கடி கிண்டல் செய்ததால் அவரை அடித்து கொன்றதாக குற்றத்தை அப்துல் ஒப்புக்கொண்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X