2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

மகள் பலாத்காரம்; நீதிமன்றத்தில் தந்தை சூடு

Freelancer   / 2022 ஜனவரி 22 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த நபரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் சைக்கிள் கடை நடத்தி வந்த தில்ஷாத் ஹுசைன் என்பவர் தனது வீட்டுக்கு அருகேயுள்ள பகவத் நிஷாத் என்பவரின் மகளை 2020ஆம் ஆண்டு கடத்தியுள்ளார்.

2021 மார்ச் மாதம் ஐதராபாத்தில் தில்ஷாத்தை கைது செய்த பொலிஸார், மைனர் சிறுமியை மீட்டனர். 

சிறுமி அளித்த பாலியல் பலாத்கார முறைப்பாட்டின்பேரில் தில்ஷாத் மீது போக்சோ உள்பட ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

வழக்கறிஞரின் அழைப்பின்பேரில் கோரக்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு தில்ஷாத் வந்துள்ளார்.  

வழக்கறிஞரை சந்திப்பதற்காக அவர் காத்திருந்த நிலையில், திடீரென அங்கு வந்த சிறுமியின் தந்தை, தான் வைத்திருந்த துப்பாக்கியால் தில்ஷாத்தின் தலையில் சுட்டுள்ளார்.

இதனால் சம்பவ இடத்திலேயே  தில்ஷாத் உயிரிழந்ததுடன்,  அருகில் இருந்த பொலிஸார் பகவத் நிஷாத்தை கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .