2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மகா கும்பமேளாவில் துறவறம் மேற்கொள்ள 1,000 பெண்கள் ஆர்வம்

Freelancer   / 2025 ஜனவரி 19 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகா கும்பமேளாவில் துறவறம் மேற்கொள்ள பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

ஜனவரி 27ஆம் திகதி முதல் நடைபெறும் சேர்க்கையில் இணைய சுமார் 1,000 பெண்கள் பதிவு செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் நாட்டின் 13 அகாடாக்களும் முகாமிட்டுள்ளன. கடந்த 13ஆம் திகதி தொடங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மகா கும்பமேளாவில், இளம் தலைமுறையினர் துறவறம் பூணும் நிகழ்ச்சி அகாடாக்களில் நிகழும்.

இந்த முறை மகா கும்பமேளாவில் வரலாறு படைக்கும் வகையில், பெண்கள் துறவறம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். 

இது குறித்து ஜுனா அகாடாவின் மூத்த துறவி திவ்யா கிரி கூறும்போது,

 “எங்கள் அகாடாவில் மட்டும் இந்த முறை 200 பெண்கள் துறவறத்துக்காக பதிவு செய்துள்ளனர். இதர 12 அகாடாக்களையும் சேர்த்தால் துறவியாகும் பெண்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுகிறது. இதற்கான முன்பதிவுகள் தொடங்கி நடைபெறுகின்றன. இவர்களுக்கு துறவறம் மேற்கொள்ள வைக்கும் நிகழ்ச்சி 27ஆம் திகதி நடைபெறும்” என்றார்.

சனாதன தர்மத்தில், துறவறத்துக்கான பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த துறவறத்தை ஒரு சாதாரண மனிதர் முதல் குடும்பவாசி வரை பலரும் மேற்கொள்ளலாம் எனக் கருதப்படுகிறது.

குடும்பத்தில் ஏற்படும் விபத்து, உலக வாழ்க்கையில் வெறுப்பு, அளவுக்கு மீறிய புகழ் மற்றும் பணம் அல்லது ஆன்மிக அனுபவத்தில் திடீர் ஏமாற்றம் போன்றவை இதற்குக் காரணமாக உள்ளன. இந்த முறை துறவறம் மேற்கொள்ள உள்ள பெண்களில், உயர்க் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .