A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருத்துறைப்பூண்டி:
மக்கள் நம்பும் சுதந்திரத்தை மக்கள் நீதி மய்யம் நிச்சயம் மக்களுக்கு வாங்கித் தருமென மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித் தார்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யப் பிரசாரப் பயணப் பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்,வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் பின்னணியில் ராஜாஜி, வேதரத்தினம் உள்ளிட்டோர் உள்ளனர். இந்தப் போராட்டத்தில் பங்காற்றிய தியாகி வைரப்பன் ஒரு நாவிதர். தனது தலைவர்கள் ஒடுக்கப்படுவதை ஏற்க முடியாமல் வெள்ளைக்கார அதிகாரிக்கு செய்த முகச் சவரத்தைப் பாதியில் நிறுத்தியவர். அவர், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது நீதிபதி கூறியும் அதை ஏற்காததோடு, வேண்டுமென்றால் நீங்கள் அந்த வேலையை செய்யுங்கள் என்று கூறி தண்டனை பெற்றவர். இது, இந்த மண்ணுக்கு கிடைத்த பெருமை.
சுதந்திரத்துக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உப்புக்கு வேலிப் போட்டார் கள். இன்றும், அதே போன்ற வேலியுள்ளது.
வேதாரண்யம், வேதாரண்யேசுவரர் கோவிலின் திறவா திருக்கதவை திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்தார். ஆனால், ஊழல் கோட்டையைப் பாட்டுப் பாடியோ, ஆடியோ திறக்க முடியாது. அதை, உதைத்துத்தான் திறக்க வேண்டியுள்ளது. மக்கள் நம்பும் சுதந்திரத்தை மக்களுக்கு வாங்கித் தரும் பணியை மக்கள் நீதி மய்யம் செய்யும் எனவும் கமல்ஹாசன் தெரிவிதார்.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026