Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 20 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரின் அருகேயுள்ள அமன் என்ற ஊரில் நடைபெற்ற இஸ்லாமிய முறையிலான திருமணம் நாடு முழுவதும் பெரும் பரபரைப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாங்கள் கேட்ட வரதட்சணையை மணமக்கள் வீட்டாரால் கொடுக்க முடியாததால், திருமணம் முடிந்த 2 மணி நேரத்திற்குள்ளேயே தன்னுடைய மனைவியை “தலாக்” கூறி இஸ்லாமிய வாலிபர் விவாகரத்து செய்துள்ளார்.
திருமணம் முடித்த கையோடு, தங்கள் மகனுக்கு சொகுசு காரும் அதிக நகைகளும் வரதட்சணையாக வேண்டும் என மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர். இதை நிறைவேற்றினால் தான் என்னுடைய மனைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்வேன் என மணமகனும் பிரச்னை செய்துள்ளார். மணமகனின் குடும்பத்தினரும் உறவினர்களும் கூட இதை ஆதரித்து, கூடுதல் வரதட்சணையை கொடுக்குமாறு மணமகளின் பெற்றோரை வற்புறுத்தியுள்ளனர்.
மணமகன் வீட்டார் கேட்ட வரதட்சணையை கொடுக்க முடியாது என மணமகள் வீட்டார் கூறியதும், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்ற ஆரம்பித்தது. இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சண்டையின் முடிவில், மணமேடையில் வைத்தே மூன்று முறை தலாக் கூறி தன்னுடைய திருமணத்தை முறித்துக் கொண்டார் ஆசிஃப்.
இந்நிலையில், மணமகன் மற்றும் அவருடைய தந்தை உட்பட 7 பேர் மீதும் ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர் மணமகள் வீட்டார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago