2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மணிப்பூர் அமைச்சர் காஷிம் வசும் வீட்டில் குண்டு தாக்குதல்

Freelancer   / 2024 செப்டெம்பர் 16 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ருல் மாவட்டத்தில் உள்ள மணிப்பூர் அமைச்சர் காஷிம் வசும் வீட்டின் மீது கையெறி குண்டு வீசி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர்.

இதையடுத்து மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ரொக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், தற்போது உக்ருல் மாவட்டத்தில் உள்ள மணிப்பூர் அமைச்சர் காஷிம் வசும் வீட்டின் மீது கையெறி குண்டு வீசி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயம் ஏற்படவில்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெடிகுண்டு வெடித்த சமயத்தில் அமைச்சர் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் வெளியில் சென்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குண்டு வெடித்ததில் அமைச்சரின் வீட்டின் சுவர்கள் மற்றும் சில பகுதிகள் சேதமடைந்தன. தாக்குதலுக்குப் பிறகு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X