Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 மார்ச் 25 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிநாதபுரத்தைச் சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான குமரேசன் ஓய்வு பெற்றவர். அவர் இறந்துவிட்டார். இவரது மகன் அரவிந்த் (வயது35). இவர் தற்போது நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர், தனது வீட்டை தற்போது பராமரித்து வருகின்றார். அவர், தனது வீட்டுக்குள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மண்ணுளி பாம்பு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
வீடு, உள்பக்கமும், வெளிபக்கமும் பூட்டியிருந்தது. இதனால், வனத்துறை அதிகாரிகள் வீட்டை உடைத்து உள்ளே சென்று சோதனையிட்டனர்.
வீட்டிலுள்ள ஓர் அறையில் தண்ணீர் பீப்பாயில் கேழ்வரகு போட்டு மண்ணுளிப் பாம்பை மூடி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விவரத்தை அறிந்து, அரவிந்த் தப்பிச்சென்று தலைமறைவாகிவிட்டார். வெளிநாட்டுக்கு விற்கும் நோக்கிலேயே பாம்பு பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago