A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹலகூர் :
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே நேற்று காங்கிரஸ் கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மலவள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கும், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர்களாக தேர்வானவர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா கலந்து கொண்டார்.
அவர் கிராம பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கினார். அதேபோல் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர்களாக தேர்வானவர்களுக்கும் பாராட்டுகள் தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.
இங்கு தொடர்ந்த பேசுகையில் ;
கர்நாடகத்தில் காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்தது. கூட்டணி ஆட்சியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தார். துணை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வர் இருந்தார். ஜனதா தளம்(எஸ்) கட்சியிடம் நிர்வாகத்தை ஒப்படைக்கவும், அவர்களுடன் கூட்டணி அமைக்கவும் நான் ஒப்புக்கொள்ளவில்லை.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026