2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

மதுபானசாலைக்குத் தீ வைத்த இளைஞரால் பரபரப்பு

Ilango Bharathy   / 2022 ஜனவரி 30 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம்: ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வந்த  மதுபானசாலைக்கு  இளைஞர் ஒருவர் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனிராவுத்தர் குளம் அருகே இயங்கி வரும் குறித்த மதுபானசாலைக்கு, கடந்த 22 ஆம் திகதி இளைஞர் ஒருவர் சென்றதாகவும், எனினும் மதுபானசாலை மூடும் நேரம் என்பதால் கடை ஊழியர்கள் அவருக்கு மதுவை விற்பனை செய்வதற்கு மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவ்  இளைஞர் நள்ளிரவில் குறித்த மதுபான சாலைக்கு தீ வைக்க முயன்றுள்ளார். இது குறித்த காட்சிகள்  அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதுதொடர்பான புகாரின் பேரில் சங்கர் என்பவரைக் கைது செய்து  விசாரணை செய்து வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .