Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 ஜனவரி 23 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மதுப்பிரியர் ஒருவர், சுயேட்சையாகக் களமிறங்கியுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ தமிழ்நாடு மது அருந்துவோர் விழிப்புணர்வு சங்கத்தின்‘ மாநில பொதுச் செயலாளரான ஆறுமுகம் என்பவரே இவ்வாறு, தேர்தலில் சுயேட்சையாகக் களமிறங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில் அப்பகுதியில் உள்ள ஒரு மதுபானசாலை அருகே தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த அவர் ”அரசுக்கு அதிமான வருவாயைத் தருபவர்கள் மதுப்பிரியர்களே. ஆனால் பெரும்பாலான மதுபானசாலைகளில் அதிக விலையில் மதுபானங்கள் விற்கப்படுகின்றன.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் எந்த உறுப்பினர்களும் குரல் எழுப்புவது இல்லை. ஆனால் நான் தேர்தலில் வெற்றி பெற்றால் மதுப் பிரியர்களின் நலனுக்காகச் சட்டப்பேரவையில் குரல் எழுப்புவேன் ” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ”மதுபானசாலைகளின் முன்னால் காணப்படும் வெற்று மதுபானப் போத்தல்களைச் சேகரித்து, விற்பனை செய்தே, தான் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
32 minute ago
35 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
32 minute ago
35 minute ago
39 minute ago