A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
கொதிக்கும் எண்ணெய் பட்டதில், நடிகை ஜாங்கிரி மதுமிதாவின் இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது.
இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படம், அனபெல் சுப்ரமணியம்.தீபக், இயக்குனர் ஏ.எல்.விஜய் படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.
இதில் விஜய் சேதுபதி, டொப்ஸி, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு,‘ஜாங்கிரி' மதுமிதா, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் விஜய் சேதுபதியும், டொப்ஸியும் இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஒரே கட்டமாக இந்தப் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி முடித்துள்ளனர்.
இதன் ஷூட்டிங், ஜெய்ப்பூரில் நடந்தது. இதன் படப்பிடிப்பில் ஜாங்கிரி மதுமிதா காட்டிய அர்ப்பணிப்பை படக்குழு பாராட்டி வருகிறது. வேகமாக சமைக்கும் காட்சி ஒன்று இந்தப் படத்துக்காகப் படமாக்கப்பட்டது.
அதில் நடிகை மதுமிதா பங்குகொண்டு வேகமாக சமைக்க வேண்டும். அப்போது எதிர்பாராத விதமாக கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் உடலில் பட்டு, அவர் இடுப்பு பகுதியில் பட்டு காயத்தை ஏற்படுத்தியது. வலியால் துடித்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், படப்பிடிப்புக்கு பாதிப்பு ஏற்படாமல் அந்தக் காட்சியில் நடித்து முடித்துள்ளார், மதுமிதா.
படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த விஷயம் படக்குழுவுக்குத் தெரிய வந்திருக்கிறது. காயம்பட்ட இடம் வடுவாக மாறியுள்ளது. பிறகு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. காயத்தை உடனே சொல்லாமல் மறைத்ததற்காக இயக்குநர் மற்றும் அவரின் குழுவைச்சேர்ந்தவர்கள் மதுமிதாவை அன்புடன் கடிந்து கொண்டிருக்கிறார்கள்.
அதே போல விரதம் மேற்கொள்வதைக் கடைப்பிடித்து வரும் மதுமிதா, ஒரு நாள் படப்பிடிப்பின்போது நாள் முழுவதும் சாப்பிடாமல் மயங்கி விழுந்துள்ளார். பதறிய படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்துள்ளனர். இருந்தும் தொடர்ந்து அந்தக் காட்சியில் நடித்து முடித்தாராம் அவர்.
47 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
59 minute ago