2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

மதுரை ஜவுளிக்கடையில் மீண்டும் தீவிபத்து

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 22 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மதுரை: மதுரையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் மீண்டும் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.

மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றின் குடோனில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே, கடந்த தீபாவளியன்று அதே பகுதியில் உள்ள மற்றொரு ஜவுளிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு வீரர்கள் கட்டடம் இடிந்து இடிப்பாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்தனர்.

தற்போது ஏற்பட்டுள்ள தீவிபத்தில் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து சேதமான தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே வாரத்தில் இரு ஜவுளிக்கடை களில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .