A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரேவா:
மத்திய பிரதேச மாநிலத்தில், கால்வாயில் பஸ் கவிழ்ந்து 16 பெண்கள் உட்பட 37 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் உள்ள பாட்னா கிராமத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ் நிலை கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது. இந்த பஸ்சில் 44 பேர் பயணம் செய்தனர். பான்சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் காரணமாக, பஸ் முழுவதும் மூழ்கியது. 7 பேர் நீந்தி கரை சேர்ந்தனர்.
தகவலறிந்து வந்த மீட்பு படையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அணையில் இருந்து தண்ணீர் திறப்பு உடனடியாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து கிரேன் உதவியுடன் பஸ் வெளியே கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்தனர். இதனை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago