A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 04 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
டில்லி :
டில்லியில், குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, விசாரணை குழு அமைக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மத்திய அரசு அமல்படுத்திய, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லையில், ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேச மாநில விவசாய சங்கங்கள், இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்களுடன் மத்திய அரசு, 11 முறை பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.
இந்நிலையில், டில்லியில் குடியரசு தினத்தன்று, விவசாய சங்கங்கள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது.அதில், 400க்கும் அதிகமான பொலிஸார் காயம் அடைந்தனர்.
பொதுச் சொத்துக்கள் சேதம் அடைந்தன. இந்த வன்முறை தொடர்பாக, டில்லி பொலிஸார், ஏராளமான விவசாயிகளை கைது செய்துள்ளனர்.மேலும், விவசாய சங்கங்களின் தலைவர்களுக்கும், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர்.
இந்தச் சூழலில், வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'டில்லி வன்முறை பற்றி விசாரிக்க, உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில், தொடர்ச்சி 7ம் பக்கம்உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதிகள் இருவர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.
மனோகர் லால் சர்மா என்பவரும். உச்ச நீதிமன்றத்தில், டில்லி வன்முறை தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:டில்லி வன்முறை தொடர்பாக, மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது, விசாரணை முழுமையாக நடக்கும் என, நம்புகிறோம்.
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், 'சட்டம் தன் கடமையை செய்யும்' என, உறுதியளித்துள்ளார். அதனால், விசாரணையில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு கூறிய நீதிபதிகள், மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
4 minute ago
15 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
25 minute ago
32 minute ago