A.K.M. Ramzy / 2021 ஜனவரி 11 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று திங்கள்கிழமை விசாரிக்கிறது.
இதேபோல், அந்த சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளை வெளியேற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில விவசாயிகள், டில்லி எல்லைகளில் 40 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுடன் மத்திய அரசு கடந்த 8ஆம் திகதி 8ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே வீடு திரும்புவோம் என்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சு வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.
18 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
8 hours ago
9 hours ago