2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மனைவிக்கு பிரசவம்: தந்தை கைது

Freelancer   / 2024 செப்டெம்பர் 08 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரபிரதேசத்தில் மருத்துவமனை சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த முடியாத நபர், தன் 3 வயது மகனை விற்க முயன்றார். இது தொடர்பாக, தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உ.பி., பர்வா பாட்டியைச் சேர்ந்த ஹரீஸ் படேல் என்பவருக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருக்கும் நிலையில், அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் 6ஆவது குழந்தை பிறந்துள்ளது.

தினக் கூலி தொழிலாளியான ஹரீஸ் படேலால், மருத்துவமனை சிகிச்சை கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதனால், அவரது மனைவியையும், குழந்தையையும் மருத்துவமனையில் இருந்து அனுப்ப மருத்துவ ஊழியர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.

என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வந்த அவரிடம், 3 வயது மகனை விற்பனை செய்தால், மருத்துவமனையின் சிகிச்சை செலவுக்கான கட்டணத்தை செலுத்தி விடலாம் என்று அங்கிருந்தவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். வேறுவழியில்லாமல் குழந்தையை விற்க ஹரீஸ் படேலும் சம்மதித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பொலிஸாருக்கு தெரிய வந்த நிலையில், குறித்த தந்தை உட்பட குழந்தையை தத்தெடுக்க முயன்ற தம்பதிகள் மற்றும், போலி மருத்துவர், மருத்துவமனை உதவியாளர் ஆகிய 5 பேரை பொலிஸார் கைது செய்தனர்.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X