2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

’மனைவியின் கடைசி ஆசை’

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

 தன் மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றினார் கணவர்.  ரூ.17 இலட்சம்  நகைகளை கோவிலுக்கு தானமாக அளித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவரது மனைவி ரஷ்மி பிரபா. இவர்கள் ம.பி., மாநிலம் உஜ்ஜைனியில் வசித்து வந்தனர். உஜ்ஜைனியில் புகழ்பெற்ற மகாகாலேஸ்வர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் நாடு முழுவதிலும் உள்ள 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றாகும்.

இந்தக் கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வருவது லஷ்மிபிரபாவின் வழக்கம் இதன் மூலம் அந்த கோவிலில் அனைவருக்கம் பரிச்சயமானார்.

தனக்கு சொந்தமான நகைகளை கோவிலுக்கு தானமாக வழங்க உள்ளதாக கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக லஷ்மிபிரபா காலமானார்.

இதனையடுத்து அவரது கணவர் மற்றும் அவரது தாயார் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர்.

அங்கு கோவில் அதிகாரிகளை சந்தித்து தனது மனைவியின் ஆசைகளில் ஒன்றான அவரது நகைகளை கோவிலுக்கு தானமாக அளிக்க முன்வருவதாக தெரிவித்தார்.

இதன்படி நெக்லஸ், வளையல்கள் மற்றும் கம்மல்கள் என மொத்தம் 310 கிராம் நகைகள் தானமாக வழங்கினர்.இவற்றின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 17 இலட்சம் மாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .