2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மன்மோகன் சிங்குக்கு டெங்கு

Freelancer   / 2021 ஒக்டோபர் 16 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

89 வயதான மூத்த காங்கிரஸ் தலைவர் மன்மோகன்சிங் புதன்கிழமையன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் காய்ச்சல் மற்றும் உடல் பலவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

அவர் கார்டியோ-நியூரோ மையத்தில் உள்ள வைத்தியசாலையின் தனியார் விடுதியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மன்மோகன் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .