A.K.M. Ramzy / 2021 மார்ச் 01 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொல்கத்தா,
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, பா.ஜனதா போலியான மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி-காங்கிரஸ் இணைந்த மகா கூட்டணி என மும்முனை போட்டி உருவாகி உள்ளது. மகா கூட்டணியின் கூட்டு பிரசாரம் ஒன்று நேற்று கொல்கத்தாவில் நடந்தது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் பேசும்போது, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைத்தார்.
மாநிலத்தில் இந்த இரு கட்சிகளும் போலியான மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதாகவும், தேர்தலுக்குப்பின் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் மம்தா பானர்ஜி, பா.ஜனதாவுடன் கரம் கோர்ப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே பல ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
3 hours ago
9 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
09 May 2026