A.K.M. Ramzy / 2021 மார்ச் 07 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பா.ஜ.க.வில் இணைந்த அவரது முன்னாள் உதவியாளர் போட்டியிடுகிறார்.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 291 பேர் கொண்ட பட்டியலை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார். அதில், நந்திகிராம் தொகுதியில் இருந்து போட்டியிட மம்தா முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் 57 பேர் கொண்ட பட்டியல் நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது. இதில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக, அவரது கட்சியில் இருந்து கடந்த நவம்பர் இறுதியில் விலகி, பா.ஜ.க.வில் இணைந்த மம்தாவின் முன்னாள் உதவியாளரான சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago