2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

’மரமேறியவனை மாடு மிதித்த கதை’

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 07 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனே:

மஹாராஷ்டிராவின் அஹமதுநகர் மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், அவசர சிகிச்சை பிரிவில் இருந்த கொரோனா நோயாளிகள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 அஹமது நகர் மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் பலர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.நேற்று திடீரென அங்கு தீப்பற்றியது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.ஆனாலும் சிகிச்சையில் இருந்த 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தீக்காயம் அடைந்த சிலர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மின் கசிவு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என்றும், புகையால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி., ராகுல், மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர், பலியானோர் குடும்பத்துக்ருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர். தீ விபத்து குறித்து உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தர விட்டுள்ளதாக முதலமைச்சர்  உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .