2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

மருந்துக் கடைகளுக்குத் தீ வைத்த மருத்துவ மாணவர்கள்

Ilango Bharathy   / 2022 மார்ச் 13 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருந்துக்  கடைகளுக்கு மருத்துவ மாணவர்கள் தீ வைத்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் தர்பங்கா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருந்துக்  கடை விற்பனையாளர்களுக்கும்,  மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த 4 கடைகள் மீதும், மருத்துவ மாணவர்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் மருத்துவ கடை ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார் எனவும் இத்தாக்குதலில் மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர் எனவும் கடைகள் மற்றும் பல வாகனங்கள்  பல சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து  அங்கு திரண்ட மருந்து விற்பனையாளர் வர்த்தக சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் இதனால் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் இம்மோதலில்  ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .