2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

மருமகனின் ஆண்குறியை துண்டித்த பெண் வீட்டார்

Editorial   / 2021 டிசெம்பர் 26 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சம்மதம் இல்லாமல் திருமணம் முடித்ததால் ஆத்திரம் அடைந்த மணமகள்  குடும்பத்தினர், மணமகனின் ஆண் உறுப்பை துண்டித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

புதுடெல்லியின் சாகர்பூர் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

ஆணுறுப்பை இழந்த அந்த 22 வயது இளைஞரும், பெண்ணும் 3 ஆண்டுகளாக நெருங்கிப் பழகியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு பதிவுத் திருமணம் நடந்திருக்கிறது. இதற்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, ரஜவ்ரி பூங்கா காவல் நிலையத்தில், திருமணம் தொடர்பான தகவல்களை அளிக்க தம்பதிகள் சென்றுள்ளனர். அவர்களுக்காக வெளியே காத்துக் கொண்டிருந்த மணமகளின் உறவினர்கள், மணமகன் வெளியே வந்தபோது, அவரைத் தூக்கிச் சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

 மணப்பெண்ணின் தந்தை, சகோதரர், மாமா உள்ளிட்டோர் நடத்திய தாக்குதலில், மணமகனின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உச்சகட்டமாக, மணமகனின் ஆணுறுப்பை மணமகளின் குடும்பத்தினர் துண்டித்தனர்.

தற்போது மணமகன் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரஜவ்ரி பூங்கா பொலிஸா கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X