A.K.M. Ramzy / 2021 மே 25 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரு:
இந்தியாவில் மஹாராஷட்டிராவில் 1,780 பேரும் கர்நாடகாவில் 446 பேருக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: கர்நாடகாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 446 பேருக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 433 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் வீட்டில் தனிமையில் உள்ளனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஊசி போடுவதற்காக 1,150 ஆம்போடெர்சின்-பி மருந்துகளை கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதுபோன்ற மேலும் பாதிப்புகள் வரலாம் என்பதால், சிகிச்சையளிக்க கூடுதலாக 20 ஆயிரம் மருந்துகளை ஒதுக்குமாறு, மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவிடம் கோரியுள்ளோம்.
கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், 3வது, 7வது மற்றும் 21வது நாளில் காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தியுள்ளோம்.
10 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
2 hours ago