2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

மாட்டுச் சாணத்தால் சேகரிக்கப்பட்ட வாக்கு

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 16 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் இம்மாதம் 19ஆம் திகதி  உள்ளாட்சி  தேர்தலானது நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வகையான நூதன பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில்  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் 11ஆவது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தனது வார்டிலுள்ள சதாசிவநகர், இந்திரா நகர், தாயப்பாதோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம்( 14) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது பொதுமக்களின் வீடுகளின் முன்பு கட்டப்பட்டிருந்த பசுமாடுகளின் சாணங்களை அவரே கூடையில் அள்ளிக் கொட்டி அப்பகுதியை சுத்தம் செய்துள்ளார்.

இந்நிலையில் சாணங்களை அள்ளி வித்தியாசமான முறையில் அ.தி.மு.க. வேட்பாளர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X