2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மாணவி பலாத்காரம்; வட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவரை, சக மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து வட்ஸ் அப்பில் வெளியிட்ட சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தின் ஹயநத்நகரில் உள்ள தனியார் பாடசாலையொன்றில்  கல்வி கற்கும் 17 வயதான குறித்த மாணவி கடந்த ஓகஸ்ட் மாதம் தனது வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

இதன்போது அங்கு வந்த அவரது வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், அம் மாணவியைக்   கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளதோடு அதனை வீடியோ எடுத்தும் வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து  யாரிடமாவது தெரிவித்தால் வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுவிடுவோம் என மிரட்டி வந்துள்ளனர்.,

இச்சம்பவம் இடம்பெற்று  10 நாட்கள் கழித்து  அம்மாணவர்களில் ஒருவன் குறித்த மாணவியை மிரட்டி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதோடு, அதனை வீடியோ எடுத்து தனது  வட்ஸ் அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார்.

குறித்த வீடியோ வைரலான நிலையில் இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக பொலிஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.

புகாரைத்  தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 மாணவர்களைக் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .