2025 ஜூலை 19, சனிக்கிழமை

மாணவிகளின் கவனத்துக்கு

Freelancer   / 2023 ஜூன் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவிகள் வாட்ஸ்அப் DP-யில் தங்கள் புகைப்படங்களை வைக்க வேண்டாம் என மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரி அறிவுறுத்தியுள்ளார்.

பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பெண்களுக்கான அதிகாரம் அளித்தல் தொடர்பான கருத்தரங்கம் சென்னை தண்டையார்பேட்டை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் திலகவதி, ஆதிலட்சுமி, லோகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெண்களுக்கான உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரி, தொழில்நுட்பத்தில் எந்த அளவுக்கு நன்மை உள்ளதோ, அதே அளவுக்கு தீமை இருப்பதாகவும், பெண்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X