Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 செப்டெம்பர் 30 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னுடைய கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த ஆபாச படங்களை மாணவிகளுக்கு காண்பித்து அவர்களுக்கு பாலியல் தொல்லைக்கொடுத்த ஆசிரியரை, ஊர் மக்கள் மடக்கிப்பிடித்து அவருக்கு செருப்பு மாலை அணிவித்து, ஊர், ஊராக கூட்டிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டம் நவ்முண்டி என்ற கிராமத்தில் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவிகளுக்கு அந்த பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து 6 மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகார் மீது உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்றுகூடி கடந்த புதன்கிழமை பள்ளிக்கு வந்த ஆசிரியரை சிறைபிடித்தனர்.
பின்னர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கடுமையாக தாக்கிய கிராம மக்கள் அவரது சட்டையை கிழித்து முகத்தில் கருப்பு மை பூசி, செருப்பு மாலை அணிவித்து ஊர் முழுவது சுற்று வர வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஊர் மக்களிடமிருந்து ஆசிரியரை மீட்டனர். பின்னர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
44 minute ago
47 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
47 minute ago
4 hours ago